1. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
விளக்கம் : மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்
Couplet :
As 'strict decorum's' laws, that all men bind,
Let each regard unenvying grace of mind
Explanation : Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct
Transliteration : Ozhukkaaraak Kolka Oruvandhan NenjaththuAzhukkaaru Ilaadha Iyalpu
2. விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
விளக்கம் : யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை
Couplet :
If man can learn to envy none on earth,
'Tis richest gift, -beyond compare its worth
Explanation : Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others
Transliteration : Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar MaattumAzhukkaatrin Anmai Perin
3. அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்
விளக்கம் : அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்
Couplet :
Nor wealth nor virtue does that man desire 'tis plain,
Whom others' wealth delights not, feeling envious pain
Explanation : Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said 'he neither desires virtue not wealth.'
Transliteration : Aranaakkam Ventaadhaan Enpaan PiranaakkamPenaadhu Azhukkarup Paan
4. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து
விளக்கம் : தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்
Couplet :
The wise through envy break not virtue's laws,
Knowing ill-deeds of foul disgrace the cause
Explanation : (The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds
Transliteration : Azhukkaatrin Allavai Seyyaar IzhukkaatrinEdham Patupaakku Arindhu
5. அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது
விளக்கம் : பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்
Couplet :
Envy they have within! Enough to seat their fate!
Though foemen fail, envy can ruin consummate
Explanation : To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destruction
Transliteration : Azhukkaaru Utaiyaarkku Adhusaalum OnnaarVazhukka yugh Keteen Padhu
6. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்
விளக்கம் : உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்
Couplet :
Who scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die
Explanation : He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment
Transliteration : Kotuppadhu Azhukkaruppaan Sutram UtuppadhooumUnpadhooum Indrik Ketum
7. அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
விளக்கம் : செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்
Couplet :
From envious man good fortune's goddess turns away,
Grudging him good, and points him out misfortune's prey
Explanation : Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister
Transliteration : Avviththu Azhukkaaru Utaiyaanaich CheyyavalThavvaiyaik Kaatti Vitum
8. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
விளக்கம் : பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்
Couplet :
Envy, embodied ill, incomparable bane,
Good fortune slays, and soul consigns to fiery pain
Explanation : Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)
Transliteration : Azhukkaaru Enaoru Paavi ThiruchchetruthTheeyuzhi Uyththu Vitum
9. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
விளக்கம் : பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்
Couplet :
To men of envious heart, when comes increase of joy,
Or loss to blameless men, the 'why' will thoughtful hearts employ
Explanation : The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered
Transliteration : Avviya Nenjaththaan Aakkamum SevviyaanKetum Ninaikkap Patum
10. அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
விளக்கம் : பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை
Couplet :
No envious men to large and full felicity attain;
No men from envy free have failed a sure increase to gain
Explanation : Never have the envious become great; never have those who are free from envy been without greatness
Transliteration : Azhukkatru Akandraarum Illai AqdhuillaarPerukkaththil Theerndhaarum Il