Wednesday, April 30, 2025

Vaazhkai Thunainalam (வாழ்க்கை துணைநலம்)

1. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு

விளக்கம் : நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்

Couplet :

If wife be wholly true to him who gained her as his bride,
Great glory gains she in the world where gods bliss abide

Explanation : If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish

Transliteration : Petraar Perinperuvar Pentir PerunjirappupPuththelir Vaazhum Ulaku

2. புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை

விளக்கம் : புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்

Couplet :

Who have not spouses that in virtue's praise delight,
They lion-like can never walk in scorner's sight

Explanation : The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them

Transliteration : Pukazhpurindha Illilorkku Illai IkazhvaarmunErupol Peetu Natai

3. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு

விளக்கம் : குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளைப் பெற்றிருப்பது

Couplet :

The house's 'blessing', men pronounce the house-wife excellent;
The gain of blessed children is its goodly ornament

Explanation : The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness

Transliteration : Mangalam Enpa Manaimaatchi Matru AdhanNankalam Nanmakkat Peru

4. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

விளக்கம் : இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்

Couplet :

As doth the house beseem, she shows her wifely dignity;
As doth her husband's wealth befit, she spends: help - meet is she

Explanation : She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state

Transliteration : Manaikdhakka Maanputaiyal Aakiththar KontaanValaththakkaal Vaazhkkaith Thunai

5. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்

விளக்கம் : நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது

Couplet :

If household excellence be wanting in the wife,
Howe'er with splendour lived, all worthless is the life

Explanation : If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing

Transliteration : Manaimaatchi Illaalkan Illaayin VaazhkkaiEnaimaatchith Thaayinum Il

6. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை

விளக்கம் : நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும் அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது

Couplet :

There is no lack within the house, where wife in worth excels,
There is no luck within the house, where wife dishonoured dwells

Explanation : If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?

Transliteration : Illadhen Illaval Maanpaanaal UlladhenIllaval Maanaak Katai?

7. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்

விளக்கம் : கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?

Couplet :

If woman might of chastity retain,
What choicer treasure doth the world contain

Explanation : What is more excellent than a wife, if she possess the stability of chastity ?

Transliteration : Pennin Perundhakka Yaavula KarpennumThinmaiun Taakap Perin

8. தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை

விளக்கம் : கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்

Couplet :

No God adoring, low she bends before her lord;
Then rising, serves: the rain falls instant at her word

Explanation : If she, who does not worship God, but who rising worships her husband, say, 'let it rain,' it will rain

Transliteration : Theyvam Thozhaaal Kozhunan ThozhudhezhuvaalPeyyenap Peyyum Mazhai

9. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்

விளக்கம் : கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்

Couplet :

Who guards herself, for husband's comfort cares, her household's fame,
In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name

Explanation : She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame

Transliteration : Tharkaaththuth Tharkontaar Penith ThakaisaandraSorkaaththuch Chorvilaal Pen

10. சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
      நிறைகாக்கும் காப்பே தலை

விளக்கம் : தம்மைத் தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்

Couplet :

Of what avail is watch and ward?
Honour's woman's safest guard

Explanation : What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity

Transliteration : Siraikaakkum Kaappevan Seyyum MakalirNiraikaakkum Kaappe Thalai

No comments:

Post a Comment